மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஊடகம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஊடுருவி, ஹேக் செய்ய முடியும் என செய்தித்தாளில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பான புகாரின்பேரில், அந்த ஊடக நிறுவனம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தவொரு மின் சாதனத்தையும் பொருத்தி, ஹேக் செய்ய இயலாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.