2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக 3வது முறையாக கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 5 இடங்களுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
புதுடெல்லி தொகுதியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வடகிழக்கு டெல்லியில் மனோஜ் திவாரி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
சாந்தினி சவுக் தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குப் பதிலாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) செயலாளர் பிரவீன் கண்டேல்வால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளன.