ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா இதுவரை நடைபெற்ற 9 தொடர்களில் 8 முறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையுடன் இந்த ஆண்டு களமிறங்கிவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் இப்போட்டியில் பங்குபெறவுள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
U19 இந்திய அணி வீரர்கள் :
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் ( கேப்டன் ), ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (WK), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
இவர்களோடு இணைந்து ரிசெர்வ் வீரர்கள் செல்வார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்றும் இந்த 15 பேரில் யாருக்கேனும் அடிபட்டால் மட்டுமே இவர்களின் ஒருவர் பங்குபெறுவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரிசெர்வ் வீரர்கள் : திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், விக்னேஷ், கிரண் சோர்மலே.
இப்போட்டியானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவடையும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.