கணபதி பெருமைகள்
May 22, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

கணபதி பெருமைகள்

எந்த  ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் கணபதியை வணங்கி விட்டுத் தொடங்கவேண்டும் என்பது நம் பாரதப் பண்பாடு.

Web Desk by Web Desk
Jul 14, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்த  ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் கணபதியை வணங்கி விட்டுத் தொடங்கவேண்டும் என்பது நம் பாரதப் பண்பாடு. எழுதத் தொடங்கும் போது கூட, பிள்ளையார் சுழி போட்டுத் தான் எதையும் தொடங்குவார்கள். இன்றும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

விக்கினங்களைத் தீர்ப்பவன் விநாயகனே. விநாயகன் என்றாலே தனக்கு மேலே தன்னை இயக்க ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள், அதாவது விநாயகப் பெருமானே பரம்பொருள், விநாயகனே சிவபெருமான், விநாயகனே இறைவன்.

தமிழ் இலக்கியங்களில் கூட, விநாயகப் பெருமானை, இறைவன் என்றே சொல்லி இருக்கின்றன. விநாயகர் வணக்கமாக காப்புச் செய்யுள் இல்லாமல் பெரும்பாலும் எந்த தமிழ் இலக்கியங்கள் இருப்பதில்லை.

ரிக் வேதத்தில் தொடங்கி வேத, ஆகம, உபநிடத, புறங்களில் பல இடங்களில் கணபதியைப் பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.

சங்க இலக்கிய நூலான பரிபாடலில் விநாயகனை ஐங்கர மைந்த என்றே சொல்லுகிறது. திருமுருகாற்றுப் படை நூலில் வரும் வெண்பா ஒன்று முருகனை ஒருகை முகன் தம்பியே என்று அழைக்கிறது. திருமந்திரத்தில் வரும் காப்புச் செய்யுள்,

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே, என்று கணபதியை வாழ்த்துகிறது.

கணங்களுக்கு தலைவர் எனவே கணபதி, ஐந்து கரங்கள் உடையவர் அதனால் ஐங்கரன், ஆனை முகம் உடையவர் ஆகவே ஆனைமுகத்தோன், பெரிய வயிறு உடையவர் ஆதலால் மகோதரன், விக்கினங்களைத் தீர்ப்பவர் ஆகவே விக்னேஸ்வரர், இப்படி பற்பல திருப்பெயர்களால் கணபதி போற்றப்படுகிறார்.

விநாயகர் சிகப்பு நிறம் உடையவர் என்று வடமொழி நூல்கள் காட்டினாலும், தமிழில் அவ்வை நீல நிறம் உடையவர் கணபதி என்றே சொல்கிறார். விநாயகனே ஓங்கார வடிவம். இவரை வணங்கினால் கலை, குணம் எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்க வேண்டிய அவசியமில்லை என்று சைவ சாஸ்திர நூல்களில் ஒன்றான உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன் என்னும் நூல் அறிவுறுத்துகிறது.

அந்தக் விநாயகர் வணக்கம் ‘நற் குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்’ என்கிறது.

ஔவையார்  விநாயகரிடம் போய் நான் உனக்கு நான்கு பொருட்களைத் தருகிறேன், நீ எனக்கு மூன்று பொருட்களைத் தா எனக் கட்டளை இடுகிறார். பால், தேன், வெல்லப் பாகு, பருப்பு, என ஔவையார் நான்குப் பொருட்களைத் தருவதாக சொல்கிறார். அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்றினையும் விநாயகரிடம் தமக்குச் தரச் சொல்கிறார்.

என்ன பொருள் என்றால்? பால் குழந்தை பருவம், தேன் விடலை பருவம், பாகுவாலிப பருவம், பருப்பு முதுமை பருவம், தனது வாழ்நாள் முழுவதும் உனக்குத் தருகிறேன் விநாயகப் பெருமானே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றினையும் மட்டும் தா என ஔவையார் வேண்டுகின்றார்.

நாமும் இதையே அந்தப் பெருமானிடம் வேண்டி வரம் பெறுவோம்.

Tags: GanesanSpiritualDevotional
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு தொகை வழங்கப்படும்- ஐசிசி

Next Post

உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ், பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும்- பிரதமர் மோடி

Related News

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!

மதுரை சித்திரை திருவிழா – வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலம்!

வைகாசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்!

மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயில் ஏழூர் திருவிழா!

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

தக் லைஃப் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் – கமல்ஹாசன்

சென்னை : தியாகராஜ சுவாமி கோயிலில் கர்நாடக பீடாதிபதி சுவாமி தரிசனம்!

தேனி : தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை – கே.எஸ். அழகிரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies