சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு தொகை வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐசிசி ஆண்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு மாநாடு தென் ஆப்பிரிக்காவிலன் டர்பன் நகரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில்சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு வழங்கப்படும், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பரிசு விகிதத்திலும் மாற்றங்களைச் செய்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் பரிசுத் தொகை சமநிலையை அடைவதற்கான ஐசிசியின் முயற்சி வரவேற்கத்தக்கது.