தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் மூலமாகவும் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சிலர் இணையத்தில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி, பட்டாசு விற்பனை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 17 பேர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆன்லைனில் பட்டாசுகள் வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், அதிகப்படியான தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் கவனமாக ஆராய வேண்டும் எனவும் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனர். 1930 என்ற எண்ணில் ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.