பெங்களூரூவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2ம் நாளில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
99 ரன்களுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் ரிஷப் பண்ட் இழந்தார். இதனையடுத்து 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது. 107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.