மொழி அரசியல் செய்வதை திமுக-வினர் கைவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர். பாஜக-வினர் மாநிலம் கடந்தும் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசு மீது ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயல்வதாக குற்றம்சாட்டிய தமிழிசை, பிற மொழியை கொண்டாடுவதால் தமிழ் சிறுமைப்படுத்தப்படும் என்ற கருத்தை மறுப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் உள்ளதாகவும், மொழி அரசியல் செய்வதை திமுக-வினர் கைவிட வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.