குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது ‘மகாராஜா’ திரைப்படம்- விரைவில் டீசர் வெளியீடு
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது ‘மகாராஜா’ திரைப்படம்- விரைவில் டீசர் வெளியீடு

Murugesan M by Murugesan M
Jul 13, 2023, 08:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் ‘மகாராஜா’வின் டீசர் விரைவில் வர உள்ளது. சினிமாவின் முக்கிய பிரபலங்கள், ஒரு படத்திற்காக ஒன்றிணையும் போது அது வர்த்தக வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ இதுபோன்ற  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குநரான நிதிலன் சாமிநாதனுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படம்தான் ‘மகாராஜா’.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல படங்களைத் தந்த ’பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் ’தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்பக்குழு என்ற சிறந்த கூட்டணியைக் கொண்டுள்ளதால், இந்தப் படமானது பான்-இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

‘மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,  வி செல்வகுமார் கலை இயக்குநர், நித்திலன் சாமிநாதன் & ராம் முரளி வசனம்,  அனல் அரசு சண்டைப்பயிற்சி,ஏஆர் அப்துல் ரசாக் ஒப்பனை,  தினேஷ் மனோகரன் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார்.

Tags: Vijay SethupathiCinema
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.

Next Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு சமமான பரிசு தொகை வழங்கப்படும்- ஐசிசி

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies