ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், அபிமன்யூ ஈஸ்வரன் துணைக் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேச டி20 தொடரில் அறிமுகமான ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியில் இருந்து நீண்ட நாட்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.