பிரான்ஸ் தேசிய தின விழாவில் பங்கேற்க, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில், 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அன்று (13-07-2023) பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
மோடிக்கு உற்சாக வரவேற்பு
தலைநகர் பாரீஸ் வந்தடைந்த
பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்
எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
மோடிக்கு பிரான்சின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் லெஜியன் ஆஃப் ஹானர் விருதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். இந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
“இந்திய மக்களின் சார்பாக அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்”
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவில்
“இது கூட்டாண்மை உணர்வை உள்ளடக்கிய ஒரு அன்பான நிகழ்வு” என குறிப்பிட்டு உள்ளார்.
பிரான்சில் UPI சேவையைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் ரொக்கமில்லா உடனடி கட்டணத்தில் இந்திய கண்டுபிடிப்புகளுக்கு, பிரான்ஸ் நாட்டில் ஒரு பெரிய புதிய சந்தையை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார்.
பிரான்ஸில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, புலம்பெயர் இந்தியர்களிடயே உரையாற்றினார்
அப்போது பேசிய பிரதமர் மோடி,
பிரான்ஸ் இந்தியா இடையேயான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின் பெருமையைக் காக்கும் வகையில் கடமையாற்றிய இந்திய வீரர்கள் உயிரிழந்ததை நினைவுகூர்ந்தார். பிரான்சின் தேசிய தின அணிவகுப்பில் பஞ்சாப் ரெஜிமென்ட் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்று குறிப்பிட்ட பிரதமர், உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை வைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை என்று குறிப்பிட்டார்.
உலகம் புதியதை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் வேகமான வளர்ச்சியை மேற்கோள் காட்டி உள்ளார்.
ஐரோப்பிய நாட்டில் முதுகலைப் பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால படிப்புக்குப் பிந்தைய பணி விசா கிடைக்கும்.
தொடர்ந்து பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை இந்தியா விரைவில் எட்டிப் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புலம்பெயர் உறுப்பினர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உலக வல்லுநர்கள் நாட்டின் கவர்ச்சியை முதலீட்டு இடமாக அங்கீகரிப்பதாகவும், வளர்ச்சி அடிப்படையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.