சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காரில் இருந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 2 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நபர் ஈரானில் இருந்து லெபனானுக்கு ஆயுதங்களை கடத்தி வரும் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இதற்காக ராணுவ தளவாடங்களை இஸ்ரேல் நகர்த்தி வருவதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் 5 கண்கள் எனப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உளவு கூட்டமைப்பிடம் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணம் டெலிகிராம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரகசிய ஆவணம் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: Syria.Iran missile attackRussia iranIsraelLebanonHamasgazaAir Strike
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

Next Post

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies