ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரவர் ஊதியத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ 7 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும என தெரிகிறது.
முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.