மகா லட்சுமியின் அம்சமான துளசி செடி ,நம் பாரத நாட்டில் தோன்றியது.இராமா ,ஸ்யாமா என்று அழைக்கப் படும் துளசி முறையே பச்சை மற்றும் கருநீல வண்ண இலைகளைக் கொண்டிருக்கும்.
பச்சை நிற இலைகளைக் கொண்ட துளசியை அவை ஒளிமயமான வாழ்வை அளிப்பதால் ஸ்ரீ இராம துளசி என்றும் ,கருநீல நிற இலைகளைக் கொண்டிருக்கும் துளசியை அவை நம் கஸ்டங்களைப் போக்குவதால் ஸ்ரீ கிருஷ்ண துளசி என்றும் போற்றுகிறோம்.
அதிர்ஷடத்தைத் தரக் கூடிய துளசியை திருமாலுக்கு உரியதாக ,உகந்ததாக நாம் போற்றுகிறோம்.
பண்டைய தமிழர்கள் துளசியைத் துழாய் என்ற சொல்லால் அழைத்தார்கள் . எடுத்துக்காட்டாக ,சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் வரும் ‘மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும்’ என்ற பாடல் திருமால் துளசி மாலை அணித்திருக்கின்றான் என்பதைச் சொல்லும் போது துழாய் என்றே சொல்லப் பட்டுள்ளது.
துளசி செடியை மாடத்தில் வைத்து வழிபடுவது நம் நாட்டின் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
துளசியின் பயன்கள் என்னென்ன ? என்று பார்ப்போம் துளசி செடி இருக்கும் வீட்டில் இடி மின்னல் தாக்காது . துளசி இருமல் சளி ஆகியவற்றுக்கு ஒரு நல்ல காய் மருந்து. செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் இலைகளைப் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி இருமல் தொந்தரவுகள் ஏற்படாது.
துளசியின் முழு செடியுமே மருத்துவக் குணங்கள் கொண்டது.துளசி இலையுடன் கொஞ்சம் மிளகாய் சேர்த்து அதனுடன் தேனையும் சேர்த்து உட்கொண்டால் நாட்பட்ட நெஞ்சு எரிச்சல் ,வயிற்று உப்பிசம் ,வயிற்று எரிச்சல் எல்லாம் உடனே நின்று விடும்.தினசரி நான்கு துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் எந்த நோயையும் வராமல் தடுக்க முடியும். காய்ச்சலுடன் சேர்ந்த ஆஸ்துமா நோய்க்கு துளசி ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.தோல் எரிச்சல், சொறி சிரங்கு ,படை நோய் உள்ளவர்கள் துளசி சாற்றைப் பூசி வந்தால் விரைவில் குணம் பெறுவார்கள் . ஒன்பது கருந்துளசி இலைகளை அரைத்து அதன் சாறெடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு ,அஜீரணம் சரியாகும் .துளசி இலைச் சாற்றைக் குடித்தால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி உடல் ஆரோக்கியமாக விளங்க பெருந்துணை புரிகிறது.
தினமும் இரண்டு துளசி இலைகளைச் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகிறது.துளசி இலைகள் இரண்டு சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும். கண் நோய் வராது. தோல் சுருக்கம் ஏற்படாது.
துளசி நீர் வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.மேலும் தினமும் துளசி நீர் பருகுவது நீரழிவு நோய் வராமல் தடுக்கும்.சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு துளசி நல்ல மருந்தாகும். காய்ந்த துளசி தண்டு மற்றும் வேர்களைத் தீயிட்டு புகை போட்டால் கொசு தொல்லை இருக்காது. ஒரு செப்பு பாத்திரத்தில் ஒருகைப் பிடி துளசியை 8 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் இரண்டு குவளை அளவு அந்த தண்ணீரைத் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் 448 நோய்கள் குணமாகும்.
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த துளசியப் பயன்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்.