அருள் தரும் ஆடி மாதம்
Oct 6, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருள் தரும் ஆடி மாதம்

ஆடி மாதத்தில் வரும் விரத தினங்கள் என்னென்ன ?

Web Desk by Web Desk
Jul 14, 2023, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை அடிப்படையாகthகொண்ட மாதங்கள் நம் தமிழ் மாதங்கள். சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயன புண்ணியகாலம் எனப்படும். சூரிய பகவான் தனது வடக்கு முகமான பயணத்தை முடித்துத் தெற்கு திசை நோக்கிய பயணமே தட்சிணாயனம். தெற்கு என்பதே பித்ருக்களின் திசையைக் குறிக்கும். அதனால்தான் இந்தக் காலத்தில் மிகுதியாகப் பித்ருக்களுக்கு பிரீத்தி செய்யும் வழிபாடுகள் மிகுதியாக இருக்கும்.

சூரியன் சந்திரனின் வீடாகிய கடக ராசியில் வரும் காலமே ஆடி மாதம் எனவே தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றும் அம்மன் மாதம் சக்தி மாதம் என்றும் போற்றப் படுகிறது.

அம்மன் கோவில்களில் மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் விழா காலமாகவே ஆடி மாதம் இருக்கும்.

எப்படி பெருமாளுக்கு புரட்டாசி மாதமோ ? எப்படி கண்ணனுக்கு மார்கழி மாதமோ ? அது போல அம்மனுக்கு ஆடி மாதம் தான் சிறப்பு .

ஆடி மாதத்தை ஆஷாட மாதம் என்றும் கூறுவர் . இந்த மாதத்தில் அம்மனை வழி பட வேண்டும் ,வழிபாடு வணங்கினால் தான் அருள் பூரணமாக கிடைக்கும் என்று சிவபெருமானே அம்மையிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன .

இத்தனை சிறப்புமிக்க ஆடி மாதத்தில் கடவுள்களை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்!

ஆடி மாத விரதங்கள்

ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மவுன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

இம்மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

ஆடிமாதம் முழுவதும் வழிப்பட்டு  வணங்குவோம்.

ShareTweetSendShare
Previous Post

வீட்டில் எவ்வளவு தங்கம் எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி கூறுவது என்ன?

Next Post

துளசி பெருமைகள்

Related News

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies