உலக அளவில் இந்தியர்கள் அனைவரும் தங்கத்தை சேமித்து வைத்து அதனை முதலீடாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் நகைகளாகவும் தங்க காசுக்காகவும் சேர்த்து வைக்கின்ற தங்கத்தின் அளவு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 70% இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக தங்கம் கையிருப்பில் சுமார் 15 சதவீதமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை தங்கமானது ஒரு ஆடம்பரமான பொருள் என்ற அளவில் மட்டும் இல்லாமல் எப்போதும் பாதுகாப்பான சேமிப்பு கருவி என்ற அளவிலும் இதன் பயன்பாடு வளர்ந்துள்ளது.
இவ்வாறு தங்கத்தை சேமிப்பாக வைத்திருக்கும் தங்கத்தின் அளவு பணத்தின் அளவு எவ்வளவு என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் CENTRAL BOARD OF DIRECT TAXES ( CBDT) வரையறை வழங்கியுள்ளது.
இதன்படி ஒரு வீட்டில் திருமணமான பெண்கள் 500 கிராம் (62.5 சவரன்)
அளவிலும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் (31.25 சவரன்) அளவிலும், ஆண்கள் 100 கிராம் (12.5 சவரன்) அளவில் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கத்தை வைத்து இருந்தால் அது சட்ட விரோதமாகும்.
இந்த வரையறையை மீறி தங்க ஆபரணங்களை வைத்திருந்தால், வருமான வரித்துறை அதிகாரிகளால் அது பறிமுதல் செய்யப்படும். எளிமையாக சொன்னால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான தங்கத்தை ஒருவர் வீட்டில் வைத்திருந்தால், கூடுதல் தங்கம் வீட்டிற்குள் எப்படி வந்தது என்பதை அவர் நியாயப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம்
தங்கத்தை போன்றே பணத்தையும் வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் பொதுவாக மக்களிடத்தில் உள்ளது. மேலும் பணத்தைப் பொறுத்தவரை ஒருவர் தனது வீட்டில் பெரும் தொகையை வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், அந்த தொகை குறித்து கேள்வி எழுப்பும்போது, இதுகுறித்து முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் அந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த கணக்கில் வராத பணத்திற்கு 137 சதவீதம் அபாரம் தொகை செலுத்த நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.