OLA தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
OLA நிறுவனம் செயலி மூலம் நுகர்வோர்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்த செயலி மூலம் பணத்தை திரும்ப பெறுவதில் நிறைய சிக்கல்கள் நீடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதேபோல OLA நிறுவனம் மூலம் பயணம் மேற்கொள்வோர்களுக்கு அதற்கான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் எழுந்தன.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன்படி, இவை நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக பார்க்கப்படுவதால் அந்நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, OLA நிறுவனம் மூலம் பயணங்களை மேற்கொள்வோர் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை, நேரடியாக வங்கிக் கணக்கிலோ அல்லது கூப்பன் மூலமோ திரும்பப்பெறும் முறையை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகன சவாரிகளுக்கான ரசீது அல்லது விலைப்பட்டியலை நுகர்வோர்களுக்கு அந்நிறுவனம் வழங்க வேண்டும் எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
.