திருப்புகழில் ஸ்ரீ இராமர்
Jun 29, 2025, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

திருப்புகழில் ஸ்ரீ இராமர்

ஸ்ரீ இராமரை கோசலை கொஞ்சி அழைக்கும் அழகோ அழகு !

Web Desk by Web Desk
Jul 14, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞான பூமியான பாரதத்தில் இராமாயணமும் மகாபாரதமும் இரண்டு முக்கியமான இதிகாச நூல்களாகும்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு செய்திகள் மட்டும் இல்லாமல் யாரையும் நல்ல கதிக்குக் கொண்டுச் சேர்க்கும் அதி அற்புதமான நூல்களாகும் .

இராம என்றால் ஒளி , அயனம் என்றால் வழி. அதாவது  இராமாயணம் என்றால் ஒளிமயமான வழி என்று பொருள். சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய மூல இராமாயணம்  ஏழு காண்டங்களில் 24000 சுலோகங்களில் அமைந்திருக்கிறது .

இதனையே தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் 11000 பாடல்களில் பெரும்காப்பியமாக செய்து இருக்கிறார். இவை தவிர மொத்தம் 120 வகையான இராமாயண நூல்கள் பல்வேறு சிறந்த புலவர்கள் மற்றும் ரிஷிகளால் எழுதப்பட்டுள்ளன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த இராமாயணத்திலும் யாரும் இராமரின் குழந்தைப் பருவத்தைப் பாடியதாக இல்லை. வால்மீகி இராமாயணத்தில் கூட பால காண்டத்திலேயே விசுவாமித்திரர் வருகை வந்து விடுகிறது. கம்பராமாயணத்திலும் கம்பர் குழந்தை இராமரைப் பற்றி இந்தச் செய்தியும் சொல்லவில்லை.

அப்படியானால் குழந்தை இராமரைப் பற்றி யாருமே படவில்லையா ?

இராமாயணத்தில் தான் இல்லையே ஒழிய திருப்புகழில் அருணகிரிநாதர் குழந்தை இராமரைக் கோசலை கொஞ்சுவதாக பாடி இருக்கிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதா ? இதோ அந்தத்  திருப்புகழையே பார்த்து விடுவோம்.

எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக

என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை

யுண்க வருக மலர்சூ டிடவருக

என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்

சிந்தை மகிழு மருகா

இப்படி “தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் தான்  கோசலை வாயிலாக குழந்தை இராமரை ஒரு பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வருகை பருவத்தில்  வரும் பாடல் போல் அருணகிரி நாதர் பாடியிருக்கிறார் .

பாடலுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம் .

எந்தை வருக ரகுநாயக  வருக … என் அப்பனே வா,ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே இனி வருக … குழந்தாய் வா, மகனே இதோ வா,

என்கண் வருக எனது  ஆருயிர் வருக … என் கண்ணே வா, என்ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக  அரசே வருக  … அழகிய ராமனே வா, இங்கேவா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூடிட  வருக … பால் குடிக்க வா, பூ முடிக்க வா,

என்று பரிவினொடு கோசலை  புகல … என்றெல்லாம் அன்போடு

கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா … வந்த மாயன் திருமால் மனம்மகிழும் மருமகனே,

இதில் பாருங்கள் கோசலை பத்து முறை ஸ்ரீ இராமரை வருக வருக என்று அழைத்திருப்பாள் .

என்ன காரணம் தெரியுமா?

ஸ்ரீ மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்ற கணக்கில் தான் .

இந்த ஒரு திருப்புகழைப்  பரிவோடு பாடினாலே அந்த திருச்செந்தூர் முருகன் மட்டுமில்லை, ஸ்ரீஇராமரும் நமக்கு எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவார் .

ShareTweetSendShare
Previous Post

நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய இந்தியர்களின் தலைசிறந்த கண்டுபிடிப்புகள்

Next Post

அனைத்து ரயில் நிலையங்களிலும் UTS செயலி சேவை

Related News

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

நெல்லை – நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்!

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

திண்டுக்கல் அருகே கருப்பணசாமி கோயில் வைகாசி திருவிழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies