திருமணத்திற்கு முன்பா? பின்பா? எப்போது தொழில் தொடங்கலாம்
Aug 22, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

திருமணத்திற்கு முன்பா? பின்பா? எப்போது தொழில் தொடங்கலாம்

இராம்குமார் சிங்காரம்

Web Desk by Web Desk
Jul 14, 2023, 09:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் தொடங்குவதற்கென்று  வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்த வயதினர் தொழில் தொடங்கினால் வலுவான உடல் அமைப்பின் காரணமாக நாள்தோறும் நீண்ட நேரம் உழைக்க முடியும். வயதானோர் தொழில் தொடங்கினால் அவர்கள் பெற்ற அனுபவத்தின் காரணமாக பல இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி சிறப்புற தொழில் நடத்தலாம்.

பளிச்சென்று சொல்வதானால், தொழில் தொடங்க வயது ஒரு தடையே  அல்ல…  அந்தந்த வயதுக்குரிய பலம், பலவீனங்களை அறிந்திருந்தாலே போதும்.

இன்றைக்கு உள்ள இளைய சமுதாயத்தினர் தொழில் தொடங்கிய அடுத்த ஆண்டே அம்பானியாகவும், பில் கேட்ஸ் ஆகவும் உயர ஆசைப்படுகின்றனர். அம்பானியும், பில்கேட்ஸ்சும் தொழில் தொடங்கி புகழ் அடைவதற்கு பல ஆண்டுகள் ஆனது என்பதை அவர்கள் உணர்வதில்லை.  சாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் குறுகிய காலத்திற்குள் எப்படி யேனும் முன்னேறி விடவேண்டும் என்கிற எண்ணம்தான் தவறு.

இரவோடு இரவாக வரும் எந்த வளர்ச்சியும் நிலைத்திருக்க முடியாது. வானுயரப் பறக்கும் இலைகள் காற்று நின்ற உடன் கீழே விழுந்து விடும். ஆனால் வேர்விட்டு காலம் காலமாக வளர்ந்து வரும் மரங்களோ, புயல் காற்றையும் தாங்கி நிற்கும் என்பதை மனதில் இருத்த வேண்டும்.

வயதானோர் தொழில் தொடங்குகின்றபோது பொதுவாக பழைய சித்தாந்தத்திலேயே அவர்கள் பழகி வந்திருப்பதால் புதிய சிந்தனைக்கு அவர்களது மூளை இடம் கொடுக்காது. தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளரின் மாறி வரும் தேவைகள், அடுத்த 10 ஆண்டுகளில் தொழில் போகும் பாதையின் தொலைநோக்கு போன்றவற்றில் அவர்களது சிந்தனையை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்.

குறைவாக சம்பளம் கொடுத்து அதிக ஊழியர்களை வேலைக்கு வைத்து தொழில்  நடத்திய பாணி அந்தக் காலம். தற்போது கூடுதல் சம்பளம் கொடுத்து குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் பாணி  நடப்பில் உள்ளது. இப்படி மாறி வரும் தேவைக்கேற்ப தங்களது சிந்தனைகளையும் மாற்றிக் கொள்வது அவசியம்.

வயதைப் போலவே குழப்பம் ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் திருமணத்திற்கு முன்பே தொழில் தொடங்கலாமா… அல்லது திருமணத்திற்கு பின்பா?

தொழில் என்பதே ஒருவகையில் ரிஸ்க் எடுக்கும் முயற்சிதான். திருமணத்திற்கு முன்பு நாம் இந்த ரிஸ்கை எடுக்கின்ற போது மனைவி, குழந்தைகள், குடும்ப நிகழ்ச்சி, உற்றார், உறவினர் வருகை போன்ற குடும்பம் சார்ந்த நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கும் அவசியம் இருக்காது. மேலும் நமக்கான பணத் தேவையும் குறைவாகவே இருக்கும். இதனால் தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியும்.

இன்னும் சொல்லப்போனால், நாம் எடுக்கும் ரிஸ்க்  நம்மோடு முடிந்துவிடும். யாரையும் பாதிக்காது. தொழிலில் ஏதாவது சறுக்கல் ஏற்படுமானால், நம்முடைய பிஸினஸ் மாடலை மாற்றி மீண்டும் முயற்சித்துப் பார்க்க கால அவகாசமும் கிடைக்கும்.

இப்படி எல்லாம் சொல்வதால், திருமணத்திற்கு பிறகு தொழில் தொடங்கக் கூடாது என்பதில்லை. பெரும்பாலானோர் திருமணத்திற்குப் பிறகே தொழில் தொடங்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அவர்களுக்கு தொழிலில் முதலீடு செய்வதற்கான பணமும், அனுபவமும் அவர்கள் பல காலம் கஷ்டப்பட்டு உழைத்த பிறகே கிடைக்கிறது.

இதுபோன்ற தருணங்களில் குடும்பத்திற்குத் தேவைப்படும் செலவுகளைப் பட்டியலிட்டு குறைந்தபட்சம் ஆறுமாதத் தேவைகளுக்கான பணத்தை இருப்பில் வைத்துவிட்டோ அல்லது ஒதுக்கி வைத்துவிட்டோ மீதமுள்ள பணத்தில் தொழில் தொடங்கலாம். தொழில் தொடங்கிய புதிதில் நமக்கென்று சம்பளம் எதையும் எடுக்க முடியாது என்பதாலேயே குடும்பச்செலவுகளுக்கு தொகை ஒதுக்குவது அவசியமாகிறது.

ஆக… நாம் தலைப்பில் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால், திருமணத்திற்கு முன்பு தொழில் தொடங்குவது பாதுகாப்பானது. திருமணத்திற்குப் பின்பு தொடங்கினால், குடும்பத்தின் மாதாந்திர செலவுகளுக்குக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிட்டுத் தொடங்குவது  நல்லது.

ShareTweetSendShare
Previous Post

முதல் தலைமுறை பட்டதாரி சலுகை!

Next Post

அவமானம்-அது வருமானம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies