இந்த சலுகை யாருக்கு கிடைக்கும்? என்ன சலுகை? தமிழ்நாட்டைப் பொருத்தவரை Professional Courses என்று சொல்லப்படுகிற Engineering, Medical, Agri, Law போன்ற படிப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.
சரி, யார் முதல் தலைமுறை பட்டதாரி சலுகைக்கு தகுதியானவர்கள்? உங்கள் குடும்பத்தில் உங்கள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என்று யாருமே இதுவரை பட்டம் வாங்கவில்லை என்றால் நீங்கள் இதற்கு தகுதியானவர்.
உங்கள் அண்ணனோ அக்காவோ ஏற்கனவே ஒரு கல்லூரியில் பட்டம் படித்துக் கொண்டு இருந்து இன்னும் முடிக்கவில்லை என்றாலும் நீங்கள் தகுதியானவர். ஆனால் உங்கள் அண்ணனோ அக்காவோ ஏற்கனவே இந்த ஏதாவது ஒரு Professional கோர்ஸ் வகையில் சேர்ந்து இந்த முதல் தலைமுறை பட்டதாரி சலுகையை பெற்றிருந்தால் உங்களால் மீண்டும் வாங்க முடியாது.
இந்த முதல் தலைமுறை பட்டதாரி சலுகையை பெறுவதற்கு அடிப்படை தகுதி என்னவென்றால், நீங்கள் தமிழ்நாடு அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலமாக அட்மிஷன் பெற்றால் மட்டுமே இது பொருந்தும். நீங்கள் கல்லூரியில் நேரடியாக மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்தால் இந்த சலுகை கிடைக்காது.
சரி, இதில் என்ன சலுகை கிடைக்கும்? நீங்கள் சேரும் Professional கோர்ஸ் பட்டப்படிப்பில் அனைத்து ஆண்டுகளுக்குமான Tuition Fee எனப்படும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதுதான் இந்த சலுகை.
தமிழ்நாட்டில் இந்த முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை தாசில்தார் உங்களுக்கு வழங்குவார். இதற்கென நீங்கள் அவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.