தமிழ்நாட்டைப் பொறுத்தவரை Engineering, Medical, Agri, Law என்று பல்வேறு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தில் நேட்டிவிட்டி சர்டிபிகேட் என்று ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். பலர் இதைப் பார்த்து என்னவென்று தெரியாமல் குழப்பிக் கொள்வதும், நம்மிடம் இது இல்லையே என்று பதட்டப்படுவதும் உண்டு.
உண்மை என்னவென்றால் இது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். எல்லோருக்கும் தேவையான சான்றிதழ் கிடையாது. ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்து தனது பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஏதாவது ஒரு வகுப்பையோ அல்லது அனைத்து வகுப்புகளையும் தமிழ்நாட்டில் படிக்காமல் வேறு ஒரு மாநிலத்தில் படித்திருந்தால் அவர்கள் மட்டுமே தாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிப்பதற்காக இந்த நேட்டிவிட்டி சர்டிபிகேட் வாங்க வேண்டும்.
மற்ற மாணவர்களுக்கு இது பொருந்தாது, அவர்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது தாசில்தாரிடம் விண்ணப்பித்து வாங்க வேண்டிய ஒரு சர்டிபிகேட்.