ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமா..?  
Nov 8, 2025, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

  ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமா..?  

 தொழில் தொடங்க எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் எத்தனை பேரால் முடிகிறது?- இராம்குமார் சிங்காரம்

Web Desk by Web Desk
Jul 14, 2023, 09:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் தொடங்க முதலீடு என்பது இரண்டாம்பட்சம்தான். முயற்சியும் மூளையும் தான் முக்கியம் என்று சிலர் போகிற போக்கில் சொல்லலாம்.  இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது..?

என் அறிவுக்கும் திறமைக்கும் நான் தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றிதான். இறங்கத்தான் தயக்கம் என்பது பலரது நிலை. இவர்களது கையைக் கட்டிப் போடுவது எது..? மூணாங்கிளாஸ் படிச்ச அவனுக்கே காசு கொட்டும்போது நானெல்லாம் பிசினஸ் பண்ணினா, எவ்வளவோ சம்பாதிக்க முடியும். இறங்கலை… அவ்வளவுதான்’ என்று சவடால் அடிப்பார்களைத் தடுப்பது எது..?

வீட்டு வாடகை அல்லது வீடு வாங்கியதற்கான வங்கிக் கடன், குடும்பத்தினரின் சாப்பாட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு என அடிப்படையான மாதச் செலவுகளை சமாளிக்க உதவும் தொகையை யாராவது கொடுக்கத் தயாராக இருந்தால் தான் தொழில் பக்கமே போவதென்று பார்ட்னர்கள் தேடி அலைபவர்கள் பலர். தொழிலைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தவர்களே ஜெயித்திருக்கிறார்கள். மற்றோரெல்லாம் ரஸ்க் டயலாக் விட்டுக்கொண்டு கரையிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

தைரியமாகத் தொழிலில் இறங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்..? தொழிலில் போட்ட பணம் திரும்பி வரும் என்பதற்கும், நிலையான வருமானம் வரும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றைக்கு நல்ல நிலையில் தொழில் வருமானத்தோடு இருப்போரல்லாம் ரிஸ்க் எடுக்கத் துணிந்த வர்கள்தான்.

 

ரிஸ்க் எடுக்கத் தயார் நான் என்பவர்களுக்கு அடுத்து காத்திருக்கிறது, இன்னும் எண்ணற்ற கேள்விகள். அவை இதோ…

·      என்ன தொழில் தொடங்குவது?

·      தெரியாத தொழிலில் இறங்கலாமா?

·      வேலையை விட்டுவிட்டு தொழில்   தொடங்குவது சரியா..?

·       திருமணம் தடைக்கல்லா…?

·       எந்த வயதில் தொடங்குவது?

·      பகுதி நேரமாக தொழில் புரியலாமா?

·      போட்டி இல்லாத தொழிலை அடையாளம் காண்பது எப்படி..?

·      பங்குதாரரை சேர்த்துக் கொள்ளலாமா?

·      பெரிய முதலீடா, சிறிய முதலீடா..?

·      முதலீட்டைப் புரட்டுவது எப்படி..?

·      தொழிலில் ஈடுபட்டபின் வெற்றிக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்..?

·      விற்பனை விலை நிர்ணயம் செய்வது எப்படி?

·      தொழிலுக்கு அலுவலகம் அவசியமா?

·      அதிர்ஷ்டம், நேரம், காலத்தில் நம்பிக்கை வைத்தால்தான் வெற்றி பெற முடியுமா..?

·      மார்க்கெட்டிங்கில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

·      பணத்தைக் கையாளும் லாவகம் தெரியாதே.. எப்படி சமாளிப்பது?

·      ஆரம்பமே அசத்தலாக இருக்க வேண்டுமா, இல்லை அடக்கி வாசிப்பது நல்லதா..?

·      விளம்பரத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும்..?

·      புதிய சிந்தனைகள் மூலம் குறுகிய காலத்தில் வெற்றி பெற முடியுமா?

·      மனைவி, உறவினர்கள் – தொழிலுக்கு பலமா… பலவீனமா..?

·      ஒருவேளை தொழிலில் வெற்றி பெற முடியாவிட்டால் என்ன செய்வது?

இந்தக் கேள்விகளில் குறைந்தபட்சம் பத்து கேள்விகளாவது உங்கள் மனதில் எழுந்திருந்தால், உங்களுக்குள் நிச்சயம் இருக்கிறது தொழில் தொடங்கும் ஆர்வம். சரியான பதிலும், திட்டமிடலும் இருந்தால் தொழிலில் தைரியமாக குதித்து விடலாம்.

ShareTweetSendShare
Previous Post

பலூன் கற்றுத் தந்த பாடம்

Next Post

சந்திரயான் 3 வெற்றிக்கு நம்பி நாராயணன் வாழ்த்து

Related News

இன்றைய தங்கம் விலை!

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது – பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

திமுக ஆட்சியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies