மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / அமைப்புகளில் பணி நியமனம், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்) ஆகியவற்றுக்கு ஹவல்தார் பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுக்குறித்து பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலர் மற்றும் மண்டல இயக்குநர் கே.நாகராஜா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு பலவகைப் பணி தொழில்நுட்பம் அல்லாத பல்வேறு பணிகளிலும், ஊழியர் பணியிடங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் சுங்கம் (சிபிஐசி), மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்) ஆகியவற்றுக்கு ஹவல்தார் பதவிகளுக்கும் ஆட்சேர்க்கைக்காக இந்த ஆணையம் போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளது.
பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் ssc.nic.in என்ற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 21.07.2023 (இரவு 23:00 மணி) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 22.07.2023 (இரவு 23:00 மணி).
தென் பிராந்தியத்தில் 2023 செப்டம்பர் மாதத்தில், கணினி அடிப்படையிலான தேர்வுகள் (முதல் தாள்) 22 மையங்களில் நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 10 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள், புதுச்சேரியில் 1 மையம், தெலங்கானா 03, தமிழ்நாட்டில் 8 மையங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.