தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில், ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில், ஆளும் கட்சியாக உள்ள அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று நடக்கிறது.
இதற்காக பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், பாஜக சார்பில், மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்கா சென்றார்.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் பரஸ்பர நலன்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை வருகின்ற 23ம் தேதி இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.