விரைவில் நெல்லைக்கு வருகிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
Oct 8, 2025, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவில் நெல்லைக்கு வருகிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.

Web Desk by Web Desk
Jul 20, 2023, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயிலான “வந்தே பாரத்” இரயிலின் முதல் சேவையை 2019 பிப்ரவரி 2ஆம் தேதி தில்லி வாரணாசி இடையே தொடங்கப்பட்ட. இந்நிலையில் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் இரயில் 2023 ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சென்ட்ரல் கோவை இடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் விதமாக சென்னை திருநெல்வேலிக்கு இடையே வந்தே பாரத் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இயக்கப்படலாம் என அறியப்படுகிறது. இதற்கான அதிகாரப் பூர்வமான தகவல் விரைவில் வெளிவரலாம்.

வந்தே பாரத் இரயில்களின் என்ஜினீன்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎப்பில் செய்யப்படுகிறது. இந்த வந்தே பாரத் இரயிலின் வேகம் புல்லட் இரயில் போல் இருக்கும். இதில் ஜிபிஎஸ் ட்ராக்கர் வசதி , கேமரா வசதி, ஏசி வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும், தொலைதூர ஊர்களுக்குச் செல்வதற்கு எப்போதும் உள்ள நேரத்தை விட குறைவான நேரத்தில் செல்லமுடியும்.  உதாரணமாக சென்னையில் இருந்து கோவை செல்ல இரயிலில் குறைந்தது 8 மணி நேரம் ஆகும் . ஆனால் வந்தே பாரத் இரயில் மூலம் 6 மணி நேரத்தில் போகலாம்.

இதன்மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது.

தெற்கு இரயில்வே மண்டலத்தில் சென்னை – மைசூர் , சென்னை – கோவை , திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து நெல்லை – சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ளார். மற்றும் இதற்கான கால அட்டவனை ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதில் குறிப்பிட்ட படி இரயில் நெல்லையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை சென்றுவிட்டு ,மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெல்லை சேரும். இதன் மூலம் வந்தே பாரத் இரயிலின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்கமுடியும்.

நெல்லைக்கு விரைவில் வர இருக்கின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் தெரியவந்துள்ளது.

ஏசி சேர் கார் , எகானாமிக் சேர் கார் ஆகிய இரு வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் 3000 வரை இருக்கலாம் எனவும் எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் மற்றும் உணவும் சேர்த்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வந்தே பாரத் இரயில் சேவை திட்டம் நாடு முழுவதும் மக்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார்.

மொத்தம் தமிழகத்தில் ஏழு வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Tags: chennaitonellaitraintimingvandhebharathtrainservicenellaitochennai
ShareTweetSendShare
Previous Post

ஆசிய மகளிர் உலக கோப்பை கால்பந்து 2023

Next Post

தேசிய கல்விக் கொள்கையைத் தனியார் பல்கலைக்கழகத்தில் அமல்படுத்த ஆளுநர் ரவி உத்தரவு

Related News

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies