இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயிலான “வந்தே பாரத்” இரயிலின் முதல் சேவையை 2019 பிப்ரவரி 2ஆம் தேதி தில்லி வாரணாசி இடையே தொடங்கப்பட்ட. இந்நிலையில் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் இரயில் 2023 ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சென்ட்ரல் கோவை இடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் விதமாக சென்னை திருநெல்வேலிக்கு இடையே வந்தே பாரத் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இயக்கப்படலாம் என அறியப்படுகிறது. இதற்கான அதிகாரப் பூர்வமான தகவல் விரைவில் வெளிவரலாம்.
வந்தே பாரத் இரயில்களின் என்ஜினீன்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎப்பில் செய்யப்படுகிறது. இந்த வந்தே பாரத் இரயிலின் வேகம் புல்லட் இரயில் போல் இருக்கும். இதில் ஜிபிஎஸ் ட்ராக்கர் வசதி , கேமரா வசதி, ஏசி வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும், தொலைதூர ஊர்களுக்குச் செல்வதற்கு எப்போதும் உள்ள நேரத்தை விட குறைவான நேரத்தில் செல்லமுடியும். உதாரணமாக சென்னையில் இருந்து கோவை செல்ல இரயிலில் குறைந்தது 8 மணி நேரம் ஆகும் . ஆனால் வந்தே பாரத் இரயில் மூலம் 6 மணி நேரத்தில் போகலாம்.
இதன்மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது.
தெற்கு இரயில்வே மண்டலத்தில் சென்னை – மைசூர் , சென்னை – கோவை , திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து நெல்லை – சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ளார். மற்றும் இதற்கான கால அட்டவனை ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதில் குறிப்பிட்ட படி இரயில் நெல்லையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை சென்றுவிட்டு ,மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெல்லை சேரும். இதன் மூலம் வந்தே பாரத் இரயிலின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்கமுடியும்.
நெல்லைக்கு விரைவில் வர இருக்கின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் தெரியவந்துள்ளது.
ஏசி சேர் கார் , எகானாமிக் சேர் கார் ஆகிய இரு வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் 3000 வரை இருக்கலாம் எனவும் எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் மற்றும் உணவும் சேர்த்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வந்தே பாரத் இரயில் சேவை திட்டம் நாடு முழுவதும் மக்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார்.
மொத்தம் தமிழகத்தில் ஏழு வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட உள்ளன.