சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் பவனில் இன்று(20.07.2023) தேசிய கல்விக் கொள்கையை தனியார் பல்கலைக்கழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் குறித்தும், இதனால் அறிவுத் தலைநகரமாக தேசம் வளர்ச்சி அடையும் எனவும் கட்டாயமாக தனியார் பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.