சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாவட்ட அளவிலான தேனி வளார்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய தேனி மற்றும் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கை, புதுடெல்லி தோட்டக்கலை ஆணையர் டாக்டர் பிரபாக்குமார் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது தேனீக்களுக்கான நோய் தாக்குதல், நோய் கட்டுப்பாடு முறைகள், பராமரிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை பார்வையிட்டனர். மேலும் அவர்களுக்கு மானியத்தில் தேனி வளர்ப்பதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.