ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் பட்டினம் காத்தான், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, பாரதி நகர், கேணிக்கரை அரண்மனை உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.