உலகின் முக்கியமான விளையாட்டுத் தொடர்களில் ஒன்றான, 9-வது ஆசிய மகளிர் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடங்கி இருக்கிறது. இன்று (20.07.2023) தொடங்கிய இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்கின்றன.
இதன் தொடக்க ஆட்டத்தில் நார்வே – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெறுகிறது. இந்த ஆட்டமானது நிறைவு பெற்றபின் ஆஸ்திரேலிய – அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மொத்தமுள்ள 32 அணிகளில் ஓசியானியாவில் இருந்து ஆஸ்திரேலியா , நியூசிலாந்து என இரு அணிகளும். ஆசியாவில் இருந்து சீனா , ஜப்பான் , பிலிப்பைன்ஸ் , தென் கொரியா , வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 5 அணிகளும். ஆப்பிரிக்காவில் இருந்து நைஜீரியா, மொரோக்கோ, தென் ஆப்பிரிக்கா ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 4 அணிகளும். வட அமெரிக்காவில் இருந்து அமெரிக்கா, கனடா , கோஸ்டாரிகா, ஹைதி, ஜமைக்கா, பனமா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 6 அணிகளும். ஐரோப்பாவில் இருந்து டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 அணிகளும். தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா, பிரேசில் , கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 3 அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் 6 மைதானங்களிலும் நியூசிலாந்தில் 4 மைதானங்களிலும் நடக்கவுள்ளது. மைதானங்களுக்காக ஆஸ்திரேலியா , நியூசிலாந்து நாடு அரசுகள் சிறப்பு செலவுகள் மூலம் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. நியூசிலாந்தின் ரக்பி மைதானத்தை கால்பந்து மைதானங்களாக மாற்றியுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.903 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.82 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து 2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.62 கோடி வழங்கப்பட உள்ளது. இதே போல 3-ஆம் இடம், 4-வது இடம், அரையிறுதி, காலிறுதி வெளியேறிய ஒவ்வொரு அணிகளுக்கும் தரவரிசைக்கு தகுந்தாற்போல பரிசுத்தொகை வழங்கப்படும் .