மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ கடந்த மே மாதம் நான்காம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மணிப்பூர் முதல்வர் பிரேயின் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க அரசு கோரும் என்றும், முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது, விரைவில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு அதிகபட்ச, கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.