ஆடவருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா, ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று (20.07.2023) தொடங்கியது. டிக்கெட்டின் விலை ரூ -300 முதல் ரூ -400 வரை விற்கப்படுகிறது.
இதற்கான டிக்கெட்டை https://in.ticketgenie.in என்ற இணையதள முகவரியில் சென்று பெற்று கொள்ளலாம்.