டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே சந்தித்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது, அவர் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று சந்தித்தார். இந்த நேரத்தில் தமிழக மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளத்து. மேலும் ஓரிரு தினங்களில் தமிழக மீனவர்கள், தமிழகம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் இரு தலைவர்களும், இந்தியா – இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, பாதுகாப்பு, வர்த்தம் உள்ளிட்டா விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அதிபரான பின்பு முதல் முறையாக ரணில் விக்ரம சிங்கே இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.