மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக ராகுல் காந்தி பேசியதாக, சூரத் நீதிமன்றத்தில் குஜராத் எம்.எல்.ஏ. பர்னேஷ் மோடி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தத்தால், ராகுல் காந்தி எம்.பி,.பதவியை இழந்தார்.
குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் காந்தி சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குஜராத் அரசும் மனுதாரர் பர்னேஷ் மோடியும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்குவிசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.