கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
Sep 26, 2026, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தரவரிசைப் பட்டியலில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Murugesan M by Murugesan M
Jul 26, 2023, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இளநிலை தொழில்நுட்ப பட்டபடிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த விஷ்ணுபிரகாஷ் முதலிடத்தை பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் சேலம் மாவட்டத்தை சார்ந்த விக்னேஷ், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியில் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்)   உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்)40 இடங்களும், கோழி வளர்ப்பு, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஜூன் 12 ந் தேதி காலை 10 மணி முதல் 30 ந் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18 ஆயிரத்து 752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3 ஆயிரத்து 783 மாணவர்கள் என 22 535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல்  இன்று https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY
Share
Tweet
SendShare
Previous Post

கார்கில் போரில்  தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Next Post

அமலாக்கத்துறை இயக்குநர் பணியை நீட்டிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

Related News

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

Load More

அண்மைச் செய்திகள்

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies