கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் ஊடுறுவல்களை கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போரில் ஈடுபட்டது. 60 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற இந்த போர், கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின் ஜூலை 26 நாள் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் நாள் கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்கில் தினம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில்,
கார்கில் விஜய் திவாஸ் தினமான இன்று, கார்கில் போரின் போது நமது மகத்தான தேசத்தை காக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம்.
Today on the day of Kargil Vijay Divas, salutes to the brave soldiers who laid their lives defending our great nation during the Kargil War.
Kargil Vijay Divas sends out a clear message that India would leave no stone unturned in championing its sovereignty. We take this moment…
— K.Annamalai (@annamalai_k) July 26, 2023
கார்கில் விஜய் திவாஸ் இந்தியா தனது இறையாண்மையை வென்றெடுப்பதில் எந்தக் கல்லையும் விட்டுவிடாது என்ற தெளிவான செய்தியைத் தெரிவிக்கிறது. நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நமது வீரர்கள் செய்யும் தியாகங்களை நினைவுகூர இந்த தருணத்தை எடுத்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.