மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 5வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையை சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்துள்ளார். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த நோட்டீஸ் மீது இன்னும் முடிவெடுக்க வில்லை என மக்களவை சபாநாயகர் அறிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து குறுகிய கால விவாதம் நடத்த மாநிலங்கள் அவையில் அனுமதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினார்களின் செயலுக்கு
மத்திய நிர்மலா சீதா ராமன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தனி தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். மேலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது