தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெட்ரோல் பங்கிற்கு கஞ்சா போதையில் தீ வைத்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மல்லாப்பூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற இளைஞர்கள் பாட்டிலில் பெட்ரோல் பிடித்துக் கொண்டனர். அப்போது, போதையில் இருந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்தனர்.
இதனால் தீ மளமளவென பரவியதையடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு சிலிண்டர் மூலம் தீயை அணைத்தனர். தகவலறிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.