புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற பிரெஞ்சு கலைஞர்களின் வான்வழி சாகச நடன நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் மற்றும் அலையான்ஸ் பிரான்சிஸ் சார்பில் இந்த வான்வழி சாகச நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கம்பிகளின் மேல் நின்றபடி கலைஞர்கள் இசைக்கு தகுந்தாற்போலவும், காற்று வீசும் திசைக்குகேற்பவும் அந்தரத்தில் நடனமாடினர். இந்த சாகச நடன நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.