தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடை சந்தைகளில் ஆடு, கோழிகளின் விற்பனை அமோக நடைபெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள கால்நடை சந்தையில் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல, திருச்சியிலுள்ள சமயபுரம் ஆட்டுச்சந்தையிலும் அண்டை மாவட்டங்களிலிருந்து ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும், ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சுகாதாரமற்ற முறையில் காணப்படும் சந்தையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.