நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்து நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் பெட்ரோல் நிரப்பியது.
அப்போது அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் பழுதடைந்து நின்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போகச்செய்து விசாரணை நடத்தினர்.