அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம்,
ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இம் மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவ., 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என்றும், 15 நாட்களுக்குள் அமலாக்கத்துறைக்குப் புதிய இயக்குனரைப் பணி நியமனம் செய்ய, ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வரும் ஜூலை 31ம் தேதியுடன் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றம் நாளை நடைபெற உள்ளது.