கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48,025 கனஅடியாக அதிகரிப்பு .இதனால் அணையின் நீர் அளவு வினாடிக்கு 119 கன அடியிலிருந்து வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 3 ஆயிரம் கன அடியானது. தொடர்ந்து பிலிகுண்டு பகுதிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 100 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்து அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கலில் பரிசல் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் , மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா உள்ளிட்ட மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு இன்று காலை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று காலை 66.86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.80 அடியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
மேற்கு திசைச் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, சென்னை , செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 26) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 26, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் . தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.