பூமியை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு- பிரதமர் நரேந்திர மோடி
Jan 14, 2026, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பூமியை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு- பிரதமர் நரேந்திர மோடி

2070 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்பாடு இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நேற்று ஜி20 உச்சி மாநாட்டின், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் நான்கவாது கூட்டம் துவங்கியது. இதில், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையர், கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,

“வரலாறும் பாரம்பரியமும் மிக்க நகரத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க மகாபலிபுரத்தை சுற்றிப்பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே, நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் என திருவள்ளுவர் எழுதியுள்ளார். மேகமானது கடல் நீரை முகர்ந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் என்பதுதான் இதன் அர்த்தம்.
இந்தியாவில், இயற்கையும் அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன. இவை பல வேதங்களிலும் வாய்மொழி மரபுகளிலும் காணப்படுகின்றன. நதிகள் தங்கள் தண்ணீரை குடிப்பதில்லை, மரங்கள் பழங்களை உண்பதில்லை, மேகங்களும் அவற்றின் நீரால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உண்பதில்லை, இயற்கை நமக்கு வழங்குகிறது. இயற்கைக்கு நாமும் வழங்க வேண்டும். தாய் பூமியை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு. இந்தக் கடமை பலரால் மிக நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது ‘காலநிலை நடவடிக்கை’ என்ற வடிவத்தை எடுத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றன. ‘ஐ.நா. காலநிலை மாநாடு’ மற்றும் ‘பாரிஸ் ஒப்பந்தம்’ ஆகியவற்றின் கீழ் மேம்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா 2030 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா உள்ளது. 2070 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்பாடு இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

‘மிஷன் அம்ரித் சரோவர்’ என்பது ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சியாகும். இந்த பணியின் கீழ், சுமார் ஒரு வருடத்தில் 63 ஆயிரம் நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த பணி முழுக்க முழுக்க சமூகத்தின் பங்கேற்பு மூலமாகவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. எங்கள் ‘கேட்ச் தி ரெயின்’ பிரசாரமும் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் நீரை சேமிக்க, 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பயன்பாடு மற்றும் ரீசார்ஜ் கட்டமைப்புகளும் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் மண் மற்றும் நீர் நிலைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அடையப்பட்டது.

கங்கை நதியை சுத்தப்படுத்த ‘நமாமி கங்கே மிஷனில்’ சமூகத்தின் பங்களிப்பையும் திறம்பட பயன்படுத்தியுள்ளோம். இது ஆற்றின் பல பகுதிகளில் டால்பின் மீண்டும் தோன்றுவதில் ஒரு பெரிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது” என தெரிவித்தார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி- தங்கம் வென்ற தமிழகப் பெண்

Next Post

2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies