வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் . அடுத்தபடியாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.
இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்குகிறது.