உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்.
இதில் அவர் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதே போல் கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.