சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Sep 12, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 29, 2023, 04:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச புலிகள் தினமானது ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் புலிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புலிகள் போன்ற கம்பீரமான உயிரினங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகும். வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதை தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி சர்வதேச புலிகள் தினம் குறித்து பேசினார் . அப்போது அவர், உலகின் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் மட்டுமுள்ளதாகவும் மற்றும் இது போன்று சிங்கங்கள், டால்பின்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் மைசூரில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் 5 வது புள்ளிவிவரங்களை, வெளியிட்டார். அதில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018-ஆம் ஆண்டில் 2,967 இல் இருந்து 6.74 சதவீதம் அதிகரித்து 2022-ஆம் ஆண்டு 3,167 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அம்ருத்  காலின் போது புலிகள் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையையும் பிரதமர் வெளியிட்டார், மேலும் சர்வதேச பெரிய பூனைகள் அமைப்பை (ஐபிசிஏ) தொடங்கினார். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட உலகின் ஏழு பெரிய பூனைகளின் பாதுகாப்பில் ஐபிசிஏ கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“புலிகள் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்தியா புலியைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அது செழிக்க ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் கொடுத்துள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் இப்போது இந்தியாவில் இருப்பதும், நாட்டில் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகங்கள் இருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவரின் முயற்சியால் இது சாத்தியமானது” என்று பிரதமர் மோடி கூறினார்.

இன்று, இந்தியா முழுவதும் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 54 புலிகள் காப்பகங்கள் உள்ளன. முன்னர் குறிப்பிட்டபடி, 2006 இல் 1,411 ஆகவும், 2010 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,167 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதும், அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மால் எஞ்சிருக்கும் புலிகளைப்  பாதுகாக்க முடியும்.

 

 

Tags: nationaltigerconservationday2023tigerday29july2023
Share
Tweet
SendShare
Previous Post

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Next Post

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி- தங்கம் வென்ற தமிழகப் பெண்

Related News

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies