தமிழ்நாட்டில் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற TNPL தொடருக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையிலா, சென்னையிலா அல்லது வேறு எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் முழுமையாக திட்டமிடப்படவில்லை என்றார்.
மேலும், மகளிர் TNPL தொடரை நடத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக மகளிர் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு, அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
















