முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி
Sep 16, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி

Web Desk by Web Desk
Jul 29, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,

நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த “என் மண் என் மக்கள்” நடைபயணம், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த #EnMannEnMakkal நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள…

— K.Annamalai (@annamalai_k) July 29, 2023

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

Next Post

தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை

Related News

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies