டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த அவசர சட்ட மசோதாவால் டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசு வசம் இருக்கும்.
சட்ட மசோதாவைத் தாக்கல் செய்த பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசுக்கு, அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக சட்டத்தில்
திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. டெல்லி நிர்வாகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் கொண்டு வரலாம் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது, எனவே அனைவரும் மசோதாவை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என கூறினார்.